இந்தியர்களே எச்சரிக்கையா இருங்கள்? சூடானில் ராணுவப்போர்!

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (08:55 IST)
சூடான் நாட்டில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சூடான் நாட்டில் அந்நாட்டின் ராணுவ ஜெனரலான ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ராணுவத்தினர் இடையேயே அங்கும் மோதல் நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எப் என்ற துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல் பர்ஹான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவம் போராக வெடித்துள்ள நிலையில் சூடான் துணை ராணுவ படையினரின் முகாமை சூடான் ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். துணை ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சூடானில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. மத்திய ராணுவத்தை அடித்து நொறுக்கிய துணை ராணுவம் சூடான் விமான நிலையம், அதிபர் மாளிகை உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பதற்றமான சூழலில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் சூடானில் வாழும் இந்தியர்களை எச்சரித்துள்ளது. வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்