3 மாதத்தில் 631 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை

புதன், 23 நவம்பர் 2016 (19:13 IST)
ஐக்கிய அரேபிய நாடுகளில் ஒன்றான அபு தாபியில் 12.5 வாரங்களில் குழந்தை ஒன்று 631 கிராம் எடையுடன் பிறந்துள்ளது.


 

 
ஐக்கிய அரோபிய நாடுகளில் ஒன்றான அபு தாபியைச் சேர்ந்த பெண், கருவில் 12.5 வாரங்கள் இருந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தை 631 கிராம் எடையுடன் பிறந்துள்ளது. இந்த பெண்ணிற்கு இந்தியாவை சேர்ந்த மருத்துவர் கோவிந்தா ஷெனாய் பிரசவம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
இந்த அதிசய குழந்தை தாயின் கருவில் 12.5 வாரங்கள் மட்டுமே இருந்துள்ளது. குழந்தை எடை, அது தாயின் காருவில் இருக்கும் கலத்தை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் மருத்துவமனைக்கு பிரசவ வழியில் வந்தபோது, அவருக்கு ரத்த கொதிப்பு அதிகமாக இருந்தது. 
 
தற்போது தாயும், குழந்தையும் நல்ல நிலையில் உள்ளனர். எதிர்பார்க்காத முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். குழந்தை இப்போது 2 கிலோ எடையுடன் உள்ளது. கருவில் உரிய வளர்ச்சி பெறாமல் பிறக்கும் குழந்தைகளை 26 வாரங்களுக்கு சிக்கிசை அளித்து பாதுகாப்பது மிக கடினமானது, என்றார். 
 
மேலும், இந்த குழந்தைக்கு 26 வாரங்கள் சிகிச்சை அளித்து, தற்போது உடல் ஆரோக்கியத்துடன் பாதுகாத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்