இந்தியாவை சேர்ந்த லூக்கா மணிமாறன் தேகராஜூ, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக உள்ளார். மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் தனக்கு முதுகு வலியும், இடுப்பு வலியும் இருப்பதாக மணிமாறனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். மணிமாறன் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம், சிகிச்சை அளிப்பதாக கூறி அவரது ஆடையை அவிழ்க்க சொல்லி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.