20 பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரி: சீனாவிற்கு எதிராக இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (07:57 IST)
லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது
 
இந்த சம்பவத்திற்குப் பின்னர் சீனாவுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தது. குறிப்பாக சீனாவில் நூற்றுக்கணக்கான செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது, இந்திய ரயில்வேயில் சீன நிறுவனங்கள் பெற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்தது, சீனப் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு கெடுபிடிகள் செய்தது,
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக சீனாவின் 20 பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரியை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக வெளிவ்நதுள்ள செய்தி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கேமரா, லேப்டாப், ஜவுளி உள்ளிட்ட 20 பொருட்களுக்கு இந்த வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன/ சீனாவிலிருந்து இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்