பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்… தப்புமா பதவி?

திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:00 IST)
இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானின் பிரதமராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் இம்ரான் கான். இந்நிலையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இம்ரான் கானுக்குப் பதிலாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அஸிப் அலி ஸர்தாரியை பிரதமராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்