’நான் ஒரு ஜிகாதியைத்தான் திருமணம் செய்வேன்’ - அமெரிக்கப் பெண்ணுக்கு சிறை

செவ்வாய், 27 ஜனவரி 2015 (13:55 IST)
ஜிகாதி ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்த அமெரிக்காவின் 19 வயது பெண் செவிலியர் ஒருவருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
கலாரோடோ மாகாணத்தை சேர்ந்த ஷெனோன் கான்லி என்னும் 19 வயது செவிலியர், "நான் ஒரு முழுமையான ஜிகாதி ஆக வேண்டும் என்பதே என் ஆசை. அவர்களின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
 
எனக்கும் அவர்களோடு சேர்ந்து கொள்கைகளுக்காகப் போராட வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு என்னாலான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் அவரை கைது செய்த அமெரிக்க காவல்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
 

 
நீதிபதிபதிகள் தங்களது தீர்ப்பில், ’தீவிரவாதிகள் மட்டுமில்லை, கோன்லி போன்றவர்களும் நாட்டுக்கு அச்சத்தை விளைவிக்கக் கூடியவர்கள்’ என்று கூறி அவருக்கு 4 வருட கடுங்காவல் தண்டனையும், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்தனர்.
 
இதனை மறுத்துள்ள அந்த பெண், ’நீதிபதி சொல்வது போல், என்னால் நாட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. என்னுடைய நோக்கம், யாருக்கும் எந்தக் கேடும் விளைவிப்பது அல்ல.
 
ஐஎஸ்ஐஎஸ் ஜிகாதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்றும், முடிந்தால் ஒரு ஜிகாதியைத் திருமணம்கூட செய்து கொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்