இன்னும் 20 ஆண்டுகள் உயிர்வாழ விரும்பும் 81 வயது தலைவர்!

வியாழன், 3 நவம்பர் 2016 (16:09 IST)
மக்களுக்கு சேவை செய்ய இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புவதாக தலாய்லாமா(81) தெரிவித்துள்ளார்.
 

 
1935ஆம் ஆண்டு ஜுலை 6-ல் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) பதினான்காம் தலாய் லாமாவாக நியமிக்கபட்டார். தனது நான்காம் வயதில் தலாய் லாமாவாக நியமிக்கபட்டவர் இவர்.
 
இதனிடையில், திபெத் நாட்டிற்கும், சீன அரசிற்கும் இடையிலான போரால் இந்தியாவிற்கு தப்பி வந்தார். தொடர்ந்து இந்தியாவின் தர்மசாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்ந்து வருகிறார்.
 
இந்நிலையில், புத்தமத தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டு பிராத்தனை கூட்டம் தரம்சாலா நகரில் நடைபெற்றது. இதில் ஏராளமான மத குருமார்கள் கலந்து கொண்டனர். இதில் தலாய்லாமாவும் பங்கு பெற்றார்.
 
அப்போது அவர் கூறுகையில், ”நான் 100 ஆண்டுக்கு மேல் வாழ்வதற்கு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட முறையில், மக்களுக்கு சேவை செய்ய இன்னும் 20 ஆண்டுகள் வாழ, நானும் பிராத்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்