மனைவியை தூக்கிச்சென்று பீர் மழையில் நனைந்த கணவன்

திங்கள், 8 அக்டோபர் 2018 (11:53 IST)
அமெரிக்காவில் போட்டி ஒன்றில் கணவன் மனைவியை தூக்கிசென்றதால் பீர் ஐ பரிசாக பெற்றுள்ளார்.
 
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், கணவன் மனைவியை தூக்கிச் செல்லும் போட்டி நடைபெற்றது. இதில் யார் மனைவியை தூக்கிக்கொண்டு அதிக தூரம் ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். வெற்றி பெறுவோருக்கு பீர் பரிசாக வழங்கப்படும்.
 
இந்த போட்டியில் 30 ஜோடியினர் பங்குபெற்றனர். இப்போட்டியில் பங்குபெற்ற ஜெசிவால் தனது மனைவி கிறிஸ்டினை 834 அடி தூரம் சுமந்து சென்று வெற்றிபெற்றார். ஜெசிவாலுக்கு தனது மனைவியின் எடைக்கு ஈடான பீர் பரிசாக வழங்கப்பட்டது.  பீர் மழையில் நனைந்த அவர் ஆனந்தத்தில் துள்ளி குதித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்