பாகிஸ்தானில் இந்து திருமணத்துக்கு சட்டப்படி அனுமதி

புதன், 28 செப்டம்பர் 2016 (14:14 IST)
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 10 மாத கால விவாதங்களுக்கு பிறகு இந்து திருமண மசோதா நிறைவேற்றப்பட்டது.


 

 
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கீழ்சபையில் 10 மாத கால விவாதங்களுக்கு பிறகு இந்து திருமண மசோதா நிரைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்து சிறுபான்மை தம்பதியினர் அவர்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும்.
 
பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.6 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். சுதந்திரம் அடைந்த நாள் முதல் அவர்கள் திருமணத்தை பதிவு செய்ய வழியின்றி தவித்து வந்தனர்.
 
இந்நிலையில் தற்போது இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு இருப்பது வரலாற்று சிறப்பாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்