ஹிலாரி கிளிண்டனை ஆபாசமாக சித்தரித்த வரைபடம் : ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:53 IST)
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை பிகினி உடையில் வரையப்பட்ட ஒரு சுவர் ஓவியம் அவரின் ஆதரவாளர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் பிரதான சாலையில் இயங்கும் ஒரு இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் ஒரு கடையின் சுவற்றில், ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க தேசிய கொடியை நீச்சல் உடையாக அணிந்திருப்பது போலவும், அவர் இடுப்பில் ஏராளமான பணத்துடன் நிற்பது போலவும் அந்தப்படம் வரையப்பட்டிருந்தது.
 
அந்த ஓவியத்திற்கு அருகில் முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவுடன் ஹிலாரி கிளிண்டன் நிற்பது போல் மற்றொரு வரைபடமும் வரையப்பட்டிருந்தது. இந்த ஓவியங்களை அங்குள்ள ஊடகங்கள் ஒளிபரப்பியது. 
 
இதைக்கண்ட ஹிலாரியின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். இதைக் கேள்வி பட்ட போலீசார் அங்கு விரைந்து, அந்த ஓவியங்களை அழிக்கும் படி அந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் கூறினர். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து, அந்த ஓவியங்கள் கருப்பு நிற பெயிண்டால் அழிக்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்