இலங்கை அரசு மீனவர்களுக்கு அபதாரம் விதிப்பது கண்டிக்கத்தக்கது- எம்பி மாணிக்கம் தாகூர்!

J.Durai

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (14:55 IST)
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த தொட்டியாபட்டி கிராமத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு அதனை இன்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்கம் தாகூர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
 
பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிராம பெண்கள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரை சூழ்ந்து கொண்டு தங்கள் ஊரில் பேருந்து வசதி 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் அவரிடம் தெரிவித்தனர் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்பி மாணிக்கம் தகவல் தெரிவித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
 
தொடர்ந்து இலங்கை கடற் படையினரால் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை குறித்து கேள்விக்கு:
 
கடந்த பத்தாண்டுகளாக மோடி அரசு தொடர்ந்து மீனவர்களை கைவிட்டு இருக்கிறது தொடர்ந்து மீனவர்கள் மீது கொடுமைகள் நடைபெற்று வருகிறது அது ராஜ்சபக்சே ஆட்சியாக இருந்தாலும் சரி ரனி விக்ரமங்க சிங் ஆட்சியாக இருந்தாலும் சரி இதையெல்லாம் பற்றி பேசாமல் நிர்மலா சீதாராமன் கதைகளை கட்டி விடுகிறார் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கிற கட்சியாக பாஜக உள்ளது. இந்த முறை புதிய அதிபர் பொறுப்பேற்ற காலத்திலாவது பாஜக உண்மையாக சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க வேண்டும் இந்திய கடற்படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்  கடற்படையினருக்கு மீனவர்களை பாதுகாக்க கூடிய அதிகாரங்களை வழங்க வேண்டியது மோடியின் கடமை. 
 
மீனவர்கள் மீது அவதாரம் மிதிப்பது குறித்த கேள்விக்கு:
 
வழக்கமாக நாடாளுமன்றத்தில் நாங்கள் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தால்  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறுவார் மீனவர்கள் மீது அவதாரம் பிரிப்பது கண்டிக்கத்தக்கது இதில் மத்திய அரசு ஜெய்சங்கர் தலையிட்டு இதனை நிறுத்த வேண்டும் இந்த முறை பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில்கூட்டத்தொடரில் நிச்சயமாக  இது குறித்து குரல் எழுப்பவும். 
 
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் பாஜக ஆட்சியிலும் பாதிக்கப்படுகிறார்கள் என அன்வர் ராஜா கூறியது குறித்து: 
 
அப்போது இருந்த சூழ்நிலை வேறு இலங்கையில் உள்நாட்டு போர் நடந்து அப்போது மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு அடுத்தவர்கள் மீது பழி போட்டது இலங்கை ஆனால் இப்போது அப்படியல்ல இலங்கையில் நிலையான அரசு வந்திருப்பதால் இப்போது நடப்பதையும் அப்போது நடப்பதை முடிச்சு போட வேண்டாம் அன்வர் ராஜா  பாஜகவுக்காக பேசுகிறாரா அல்லது உண்மையிலேயே மீனவர்களுக்காக பேசுகிறார் என்பது ஐயமாக இருக்கிறது.
 
அரசியல் ரீதியாக திருமாவளவன் கற்பழிக்கப்பட்டார் என்று அன்வர் ராஜா பேசியது குறித்து:
 
மதிக்கக் கூடிய தலைவரான திருமாவளவனை அன்வர் ராஜா பேசுவது அருவருக்கத்தக்க ஏற்கப்படாதது இதுதான் அதிமுக காரர்களின் கட்சியினுடைய கொள்கையா என்பது எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்