அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு – ஒரு மாணவன் பலி … 8 பேர் படுகாயம் !

புதன், 8 மே 2019 (12:35 IST)
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு மாணவர் பலியாகியுள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாகாணம், ஹைலேண்ட் ரான்ச் என்ற பகுதியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியான ஸ்டெம் (STEM - science, technology, engineering, and mathematics) பள்ளியில் திடீரென்று இரண்டு மாணவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கித் தாக்குதல் நடத்திய இரண்டு மாணவர்களும் அதேப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலை அடுத்து பள்ளி முழுவதையும் காவல்துறை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த தாக்குதலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட போலிஸார் அப்படி யாரும் இல்லை எனவும் மாணவர்கள் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ‘ தாக்குதலி உயிரிழந்த மாணவரின்  குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் கூட எப்போதும் நாங்கள் இருப்போம்.’ எனத் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்