கவுதமாலாவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

புதன், 9 டிசம்பர் 2015 (12:21 IST)
கவுதமாலா நாட்டின் தென் பகுதியில் நேற்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தினால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.


 
 
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் பல கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியில் வந்தனர். அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
 
கவுதமாலா பசிபிக் கடலோரப்பகுதியின் அருகே பூமியில் இருந்து 109 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
 
நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதுவும் இல்லையென்றாலும், மேலும் நில நடுக்கம் வரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்