காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி!

வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (14:50 IST)
மெக்சிகோவை சேர்ந்த 96 வயது மூதாட்டி ஒருவர் காதல் கடிதங்கள் எழுத பள்ளியில் சேர்ந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.
 
மெக்சிகோவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் 96 வயது மூதாட்டி குயாடலூப் பலேசியஸ். இவர் வசதியில்லாத குடும்பத்தில் பிறந்ததால் அவரால் படிக்க முடியவில்லை, பிறகு திருமணமான பின் கோழி விற்பனை செய்து வந்தார். 
 
பின்னர் வயது முதிர்ந்த நிலையில் அவர் பள்ளியில் படிக்க ஆசைப்பட்டார். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டில் முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் படிக்க தொடங்கினார். தற்போது அவர் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி பாடங்களை படித்து முடித்து விட்டார்.
 
இந்த படிப்பு ஆர்வம் குறித்து அவரிடம் கேட்ட போது. அவர் காதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக தான் படிக்க தொடங்கினேன் என கூறினார். மேலும், தனது 100-வயதிற்குள் உயர் கல்வியை முடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்