அப்போது டிரம்ப், அமெரிக்கா, ரஷ்யா உறவில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இனி வரும் காலங்களிலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவோம் என்றார்.
இந்நிலையில், நடிகரும், முன்னாள் கலிஃபோர்னியா மாகாண ஆளுநரான அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப்பை விமர்சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அதில், அதிபர் டிரம்ப், நான் இப்போது ரஷ்ய அதிபர் உடனான உங்களது பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தேன். அந்த வீடியோ மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. நீங்கள் புதின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்கள். நீங்கள் என்ன புதினிடம் செல்பியோ அல்லது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க போகிறீர்களா என கேட்டுள்ளார்.