புத்தாண்டு கொண்டாட்டம்; டூடுலை மாற்றிய கூகிள்!

சனி, 1 ஜனவரி 2022 (09:15 IST)
புது வருடமான 2022ன் தொடக்கத்தை உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வரும் நிலையில் தனது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது கூகிள்.

உலகம் முழுவதும் புது ஆண்டிற்குள் நுழைந்துள்ள நிலையில் உலக மக்கள் புது ஆண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். அதேசமயம் உலக நாடுகள் பலவற்றில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் கொண்டாடினர்.

பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கும் சிறப்பு டூடுலை வெளியிடும் கூகிள் 2022 புத்தாண்டிற்கும் தனது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனமும் தனது செயலியில் பேஸ்புக் சிறப்பு அனிமேஷனை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்