சிறுமிகளை கன்னி கழிக்க அப்பாயின்மெண்ட் வாங்கும் தென்னாபிரிக்க பழங்குடியின மக்கள்

திங்கள், 19 பிப்ரவரி 2018 (14:07 IST)
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலாவி என்ற நாட்டின் தென்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஒரு மூட நம்பிக்கை இருந்து வருகிறது.
 
அதாவது பூப்பெய்து சிறுமிகளை பரிசுத்தப்படுத்துதல் என்ற பெயரில் சாமியார்களுடன் முதன்முதலாக உடலுறவில் ஈடுபடுத்துவதை ஒரு சடங்காகவே கருதி வருகின்றனர். இந்த சடங்கை செய்யவில்லை என்றால் அந்த குடும்பத்தினர்களுக்கு தீங்கு நடக்கும் என்பது மூடநம்பிக்கை
 
லட்சக்கணக்கான பழங்குடியின கூட்டத்தில் இந்த சடங்கை செய்ய  பத்து சாமியார்கள் மட்டுமே உள்ளனர். எனவே ஒரு வீட்டில் சிறுமி வயதுக்கு வந்துவிட்டால் இந்த சாமியார்களிடம் முன்கூட்டியே அப்பாயின்மெண்ட் வாங்கி கன்னி கழிக்கின்றனர். இந்த சாமியார்களில் சிலருக்கு எய்ட்ஸ் உள்ளது என்பதுதான் கொடுமை. அதைவிட இப்படிப்பட்ட மூடநம்பிக்கையையும், பழக்கத்தையும் தடுக்க அந்நாட்டின் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்