உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள்! – ஜெர்மனி உதவியில் கடுப்பான ரஷ்யா!

ஞாயிறு, 26 ஜூன் 2022 (08:25 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் ஜெர்மனி தற்போது ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 4 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் போர் முடிவடையாமல் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் உக்ரைன் தனது சிறிய ராணுவத்தை கொண்டு தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து போராடி வருகிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள், பொருளாதார உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஜெர்மனி, உக்ரைனுக்கு ஹோவிட்சர் ரக கனரக ஆயுதங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. 18 ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை உக்ரைன் கேட்டிருந்த நிலையில் ஜெர்மனி 5 வரை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவி வருவது ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்