நண்பரின் மர்ம உறுப்பை வெட்டிய நபர்: மது போதையில் வெறிச்செயல்!

செவ்வாய், 11 அக்டோபர் 2016 (15:03 IST)
ஜெர்மனியில் குடி போதையில் நண்பர்கள் இருவரிடம் ஏற்பட்ட தகறாரில் ஒருவர் மற்றொருவரை அடித்து கொலை செய்து, அவரது மர்ம உறுப்பை வெட்டி வீசிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஜெர்மனியின் கெஸ்சன் பகுதியில் 53 வயதனான ஒருவரும் அவரது நண்பரான 32 வயதான ஒருவரும் மது அருந்தியுள்ளனர். மது போதை அதிகமானதும் 53 வயதான நபர் தனது நண்பரின் மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கியுள்ளார்.
 
இதனால் வலி தாங்க முடியாத அந்த 32 வயதான நபர் 53 வயதான நபரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டுள்ளார். இதனால் கீழே விழுந்த அந்த நபர் திடீரென இறந்துள்ளார். பின்னர் இறந்த அந்த 53 வயது நபரின் மர்ம உறுப்பை வெட்டி வீசியுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறை விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணையின் முடிவில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்