அமெரிக்காவில் தொடங்கப்படும் கஞ்சா தீம் பார்க்

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:50 IST)
அமெரிக்காவில் பொழுது போக்திற்காக முதன்முறையாக கஞ்சா தீம் பார்க் ஒன்று தொடங்கப்படவுள்ளது.


 

 
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின், தென் டகோட்டா மாநிலத்தில் கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் உள்ள சாண்டீ சியூக்ஸ் பழங்குடியினர், தாமே கஞ்சாவைப் பயிரிட உள்ளதாகவும், அத்துடன் கஞ்சாவிற்கான இரவு விடுதி, புகைப்பிடிக்கும் அறை போன்றவற்றை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இந்தப் பழங்குடியினத் தலைவர் அந்தோணி ரெய்டெர் கூறுகையில், "அமெரிக்காவில் முதன் முறையாக நாங்கள் அமைக்கவுள்ள இந்த தீம் பார்க், வயது வந்தோருக்கான விளையாட்டு களமாக இருக அமையும்" என்று கூறியுள்ளார்.

இந்த கலாச்சாரம் எங்கபோயி முடியுமோ தெரியல...

வெப்துனியாவைப் படிக்கவும்