அரை நிர்வாணமாக பிரச்சாரம் செய்த பெண் வேட்பாளர்! பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் பரபரப்பு

சனி, 11 மார்ச் 2017 (05:53 IST)
பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் அரைநிர்வாணமாக பிரச்சாரம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஒரு பெண் இயக்கத்தை சேர்ந்தவர் என்று நினைத்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு அதிகரித்துள்ளது.



 


பிரான்ஸ் நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 'பிளஷர் கட்சியில் இருந்து போட்டியிடும் 52 வயதான சிண்டிலீ என்பவர் நேற்று பாரீஸ் தெருவில் மேலாடை இன்றி திடீரென பிரச்சாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலில் அவரை பெண்ணியவாதி என்று நினைத்து போலீசார் தவறாக கைது செய்துவிட்டனர். பின்னர் அதிபர் வேட்பாளர் என தெரிந்து விடுதலை செய்தனர். ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவே தான் அரைநிர்வாணமாக பிரச்சாரம் செய்ததாக சிண்டிலீ தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்