ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் , ஐரோப்பிய யூனியன் ஆதரவு வேட்பாளர் மக்ரோன் 23.9 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரான்ஸ் விலக வேண்டும் என்று கூறி வரும் தேசிய முன்னணி வேட்பாளர் லி பென், 21.4 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தேர்தலில் மக்ரோன் முன்னிலை பெற்றதை அடுத்து நே\ற்று யூரோ நாணயத்தின் மதிப்பும், நேற்று சற்று உயர்ந்தது. அவருக்கு, ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன் கிளவுடு ஜூங்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.