சோவியன் யூனியனின் முன்னாள் தலைவர் மிக்கைல் கோப்பசேவ் மறைவு

புதன், 31 ஆகஸ்ட் 2022 (22:33 IST)
சோவியன் யூனியனின் முன்னாள் தலைவர் மிக்கைல் கோப்பசேவ் இன்று காலமானார்.

சோவியன் யூனியனின் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை யூனியன் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ். இவர் பதவியில் இருந்தபோது, பல சீர்திருந்தங்கள் செய்தார். அப்போது, பல நாடுகள் யூனியனில் இருந்து பிரிந்து  சுதந்திரம் பெற்றன.

இந்த நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில்,, வயது முதிர்வு காரணமாக இன்று மிக்கைல் கோர்ப்பசேவ் காலமானார். இதுகுறித்த செய்தியை ரஷ்ய ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.

கோப்பசேவ் மறைவுக்கு ரஷிய அரசியல் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்