கால்பந்து கிளப் ரசிகர்களிடையே மோதல்: வேடிக்கை பார்க்க வந்த ரசிகர் உயிரிழப்பு

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:37 IST)
கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் திடீரென ஏற்பட்ட கலவரம் காரணமாக விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்த 19 வயது ரசிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கிரீஸ் நாட்டில் உள்ளூர் கால்பந்து கிளப் ஒன்றின் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் திடீரென வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இந்த மோதலில் 19 வயது இளைஞர் பரிதாபமாக கொல்லப்பட்டதாகவும் இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்கள் ஏற்படாமலிருக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் விளையாட்டு துறையை சீர்திருத்த விரைவில் சட்டம் இயற்றப்படும் என கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்