மோடியின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையை பின்பற்றுங்கள்: ரஷ்ய தொழிலதிபர்களுக்கு புதின் அறிவுரை..!

புதன், 13 செப்டம்பர் 2023 (15:16 IST)
இந்திய பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா கொள்கையை பின்பற்றுங்கள் என ரஷ்ய தொழிலதிபர்களுக்கு அந்நாட்டு அதிபர் புதின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 இந்தியாவின் கடந்த சில ஆண்டுகளாக மேக் இன் இந்தியா என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது என்பதும் இந்த திட்டம் உலக அளவில் புகழ்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்திய பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா கொள்கையை பின்பற்றுமாறு ரஷ்ய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு புதின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் உள்ளூர் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யவும்,மக்கள் அவற்றை வாங்கவும் இந்திய பிரதமர் மோடி உற்சாகப்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்