அபுதாபியில் முதல் இந்து கற்கோயில்; அடிக்கல் நாட்டிய மோடி
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (17:01 IST)
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரில் அமைய உள்ள முதல் இந்து கற்கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துபாயில் இருந்து அபுதாபி செல்லும் நெடுஞ்சாலையில் அபுதாபி நகரில் கல்லால் ஆன முதல் இந்து கோயில் அமைய உள்ளது. இது 55 ஆயிரம் மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.
மோடி இந்த கற்கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்தியர்கள் சார்ப்பில் பிரதமர் மோடி இளவரசர் முகமது பின் சையத் அல் நஹ்யானுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்த கோயில் கட்டிடக்கலை மற்றும் வசீகரம் ஆகியவற்றிற்கான தனுத்துவம் மிக்க ஒன்றாக மட்டுமின்றி, வாசுதைவ குடும்பகம் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும் என்றார்.
மேலும் அனைத்து மத பின்னணி கொண்டவர்களும் இந்த கோயிலுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.