புலியுடன் நட்பு வைத்து பிரபலமான ஆடு பலி ! நெட்டிசன்கள் இரங்கல் !

திங்கள், 11 நவம்பர் 2019 (19:06 IST)
ரஷியாவில் உள்ள விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அமுர் என்ற பெயர் கொண்ட சைபீரிய புலியை வளர்த்து வந்தனர்.  கடந்த 2015 ஆம் ஆண்டு அங்குள்ள புலிக்கு , அந்த ஆடை இறைச்சிக்காக அனுப்பினர்.
உயிரியல் பூங்கா ஊழியர்களில் கணிப்புக்கு மாறாக அந்த ஆட்டுடன், புலி நட்பு கொண்டது. அதன்பின்னர் ஆடும், புலியும் இணைந்து நண்பர்களாகப் பழகி வந்தன. இந்த இரு விலங்குகள் இணைந்திருக்கும் போட்டோ வைரலானது.
 
இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆடு, புலியைச் சீண்டவே, பொறுமையிழந்த புலி அதைக் கடித்து வீசியது.
 
அதில் காயமடைந்த ஆடு, தலைநகர் மாஸ்கோவில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி உயிரிழந்தது.  இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்