ஸ்பைடர் பட பாணியில் அதிரடியாக களமிறங்கும் ஃபேஸ்புக்

செவ்வாய், 28 நவம்பர் 2017 (15:20 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்கொலைகளை தடுக்க புதிய அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது.


 
ஃபேஸ்புக் பதிவு அல்லது அலிவ் வீடியோ உள்ளிடவையில் தற்கொலை சார்ந்த கருத்துக்களை ஒருவர் பயன்படுத்தும்போது பேடெர்ன் அங்கீகாரம் எனும் வழிமுறையை பயன்படுத்தி பேஸ்புக் கண்டறியும். இந்த அம்சம் ஐரோப்பிய யூனியன் தவிர உலகின் மற்ற பகுதிகளில் வழங்கப்படுகிறது.
 
இதுகுறித்து ஃபேஸ்புக் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணை தலைவர் கை ரோசென் கூறியதாவது:-
 
தற்கொலை தடுப்பு மற்று சுய தீங்கு விளைவிப்பவர்களுக்கு வழிகாட்டுவதில் அனுபவம் மிக்க குழுவினர் ஃபேஸ்புக்கில் பணியாற்றி வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் சவால்கள், சுய தீங்கு, தற்கொலை போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் வார்த்தைகள், ஹேஷ்டேக் மற்றும் குரூப் பெயர்களை தற்கொலை தடுப்பு நிறுவனங்களுடன் இணைந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.
 
உலக தற்கொலை தடுப்பு தினமான செப்டம்பர் 10ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஃபேஸ்புக் சேவையை பாதுகாப்பான சமூகமாக உருவாக்கும் பணிகளின் ஒரு அங்கமாக ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களில் யாரேனும் மன் சோர்வில் இருக்கும்போது அவருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க ஃபேஸ்புக் உதவி செய்து வருகிறது.
 
இவ்வாறு ஃபேஸ்புக்கின் தடுகொலை தடுப்பு புதிய அம்சம் குறித்து கை ரோசென் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்