உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் செயலி பேஸ்புக். தாய் நிறுவனமான பேஸ்புக்கின் கீழ் வாட்ஸப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மேலும் சில சமூக வலைதளங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுமட்டுமன்றி தொழில்நுட்ப கேட்ஜெட்டுகள் தயாரிப்பிலும் பேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில காலமாக பேஸ்புக் செயலி மற்றும் அதன் கிளை செயலிகள் தகவல் திருட்டு, பாதுகாப்பற்ற தன்மை உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் மக்களிடையே இவற்றிற்கான வரவேற்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருடாந்திர கூட்டத்தில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கெர்பெர்க் பேஸ்புக் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பேஸ்புக் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய பெயர் என்னவாக இருக்கும் என்ற யூகங்கள் எழுந்துள்ளது.