பேஸ்புக் நிறுவனர் மீது 17 லட்சம் டாலர் மோசடி வழக்கு பதிவு

திங்கள், 5 அக்டோபர் 2015 (04:09 IST)
அமெரிக்காவில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் சுமார் 17 லட்சம் டாலர் ஒப்பந்தத்தை  நிறைவேற்ற வில்லை என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து,  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த புகார் குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
ஆனால், இந்த வழக்கை ஏற்க வேண்டாம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்