கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் சரிவு

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:44 IST)
கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உலக மக்கள் தொகையிலிருந்து 10 சதவீதத்திற்கும் கீழ் குறையவுள்ளதாக உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து உலகவங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்  ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் " உலக மக்கள் தொகையில்கடுமையானவறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம், வரலாற்றில் முதல்முறையாக 10%க்கும் கீழாக சரியவுள்ளது. கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, இந்தாண்டு இறுதியில் 70.2 கோடியாக குறைகிறது. இது உலக மக்கள் தொகையில் 9.6 சதவீதம் ஆகும். கடந்த 2012ல் 13%ஆகவும், 1999ல் 29%ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆசியாவிலும், ஆப்ரிக்காவின் சஹாரா பகுதியிலும் வறுமையின் பிடியில் அதிகமானோர் சிக்கியுள்ளனர். 
தற்பொழுது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், சுகாதாரம், கல்விதுறையில் அதிகளவிலான முதலீடும் இச்சரிவுக்கு முக்கிய காரணம்.
 
ஒருநாள் வருமானம் 125 ரூபாய்க்கும் கீழ் உள்ளவர்கள் கடும் வறுமையின் பிடியில் உள்ளதாக உலகவங்கி இக்கணக்கீட்டை எடுத்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டோர் யாரும் இவ்வுலகில் இருக்கக்கூடாது என்பதே உலகவங்கியின் இலக்காக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்