எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல.. ஒரு ராக்கெட் கூட ஏவமுடியாத சோகத்தில் இங்கிலாந்து!

செவ்வாய், 10 ஜனவரி 2023 (13:05 IST)
நீண்ட காலமாக சொந்தமாக ராக்கெட் ஏவ இங்கிலாந்து முயற்சித்து சமீபத்தில் விண்ணில் ஏவிய செயற்கைக்கோள் ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்துள்ளது.

உலக வல்லரசு நாடுகளில் முக்கியமான நாடாக உள்ளது இங்கிலாந்து. உலகப்போருக்கு முன்னர் உலகின் பல பகுதிகளில் தனது ராஜ்ஜியத்தை நடத்திய இங்கிலாந்து விண்வெளி துறையில் மற்ற நாடுகளின் உதவியை நம்பியே இருந்து வருகிறது. நாசாவுக்கு நிகராக இந்தியாவின் இஸ்ரோவும் ‘மங்கள்யான்’ வரை பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் தற்போது வரை இங்கிலாந்து சொந்தமாக ஒரு ராக்கெட்டை கூட ஏவமுடியாமல் திண்டாடி வருகிறது.

தற்போது இங்கிலாந்தின் விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் ராக்கெட்டை பொருத்தி விண்வெளியில் ராக்கெட்டை ஏவும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்களை வைத்து விண்வெளியில் வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவது திட்டம்.

அதன்படி புறப்பட்ட போயிங் 747 விமானம் அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் கடல்பகுதிக்கு 35 ஆயிரம் அடி மேலே உயரத்தில் ராக்கெட்டை விடுவித்தது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியை சென்றடைந்தாலும் எதிர்பார்த்தபடி செயற்கைக்கோள்களை பிரித்து விண்ணில் நிலை நிறுத்த முடியாமல் இந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் சொந்தமாக ஒரு ராக்கெட் ஏவ முடியாமல் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப பிற நாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளதால் சோகத்தில் உள்ளதாம் இங்கிலாந்து.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்