இங்கிலாந்து பிரதமர் பெயர் குழப்பத்தால் வந்த பிரச்சனை : ஆபாச நடிகைக்கு குவிந்த வாழ்த்துக்கள்

செவ்வாய், 12 ஜூலை 2016 (17:32 IST)
இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயரில் உள்ள ஆபாச நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்த செய்தி வெளியாகியிருக்கிறது. 


 

 
இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பெரும்பாலான மக்கள், பொதுவாக்கெடுப்பில் வாக்களித்ததால், அங்கு பிரதமராக இருந்த கேமரூன் பதவி விலக நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
 
இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய இரண்டு பேர் இருந்தனர்.
 
திடீர் திருப்பமாக ஆண்டிரியா லீட்சம், போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தெரேசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. அவர் நாளை காலை புதிய பிரதமாராக பதவியேற்க உள்ளார்.
 
இந்நிலையில், இங்கிலாந்துஇல் தெரசா மே என்ற பெயரில் ஒரு பிரபல ஆபாச நடிகை இருக்கிறார். பலரும் ஆபாச நடிகைதான் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கிறார் என நினைத்து நினைத்து அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் அனுப்பி வருகின்றனர்.
 
அது நான் இல்லை என்று முதலில் பொறுமையாக பதில் கூறி வந்த அந்த ஆபாச நடிகை தெரசா மே, ஒரு கட்டத்தில் பொங்கி விட்டார். “எத்தனை முறை சொன்னாலும், என்னை பிரதமர் என நினைத்து வாழ்த்து கூறுவது பலருக்கு பொழுது போக்காகி விட்டது. இது மக்களின் அறியாமையை காட்டுகிறது” என்று டிவிட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்