சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 31 நக்சல்கள் பலியானதாகவும், இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில், இந்திராவதி தேசிய பூங்காவில் இன்று காலை, நக்சல் படையினர் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, பாதுகாப்பு பணியாளர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை 80 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆண்டிற்குள் நக்சல்கள் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் மாறும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.