23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவு! – இளம்பெண் என்ன ஆனார் தெரியுமா?

வெள்ளி, 27 மே 2022 (10:35 IST)
இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 25 வயது இளம்பெண் ஜோ சாண்ட்லர். உலகம் முழுவதும் பல வகை உணவுகள் இருந்தாலும் சாண்ட்விச் மீது பிரியம் கொண்ட இவர் இவரது 2வது வயதில் இருந்தே சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்.

அவரது பெற்றோர் வேறு உணவுகளை கொடுத்தாலும் அதை சாப்பிட மறுத்த அவருக்கு உணவு என்றாலே சாண்ட்விச்தான் என்று பழக்கமாகிவிட்டது. கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச்சை மட்டுமே உணவாக கொண்ட அவருக்கு சமீபத்தில் மூளை மற்றும் நரம்புகளை தாக்கக்கூடிய நோயின் அறிகுறி தென்பட தொடங்கியுள்ளது.

இதனால் மருத்துவரிடம் அவர் சென்ற நிலையில் இதற்கு மேலும் மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் வாழ்க்கை முழுவதும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இதனால் பயந்துபோன சாண்ட்லர் தற்போது பெர்ரி பழங்கள், கடலை என கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உணவுகளையும் சாப்பிட தொடங்கியுள்ளாராம். இதைதான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் போல!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்