இங்கிலாந்தின் புதிய பிரதமர் தெரசா

செவ்வாய், 12 ஜூலை 2016 (10:36 IST)
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை பதவி விலகுகிறார், அதை தொடர்ந்து, தெரசா மே என்ற பெண், நாளை இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.


 


ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா வேண்டமா என்ற பொது வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் ஆதரித்த பக்கம் தோல்வியடைந்ததால், கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனால், இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ஆளுங்கட்சியின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பபடுபவரே, பிரதமராகவும் நியமிக்கப்படுவார்.

இதை தொடர்ந்து, தலைவர், பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி அமைச்சர் ஆண்டிரியா லீட்சம், உள்துறை அமைச்சர் தெரசா மே ஆகியோரும் போட்டி போடுவதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று ஆண்டிரியா லீட்சம் பிரதமர் போட்டியில் இருந்து விலகினார். இதனால், தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது..


 

வெப்துனியாவைப் படிக்கவும்