ட்விட்டரை அடுத்து புதிய 'AI' தொழில்நுட்பத்தில் களமிறங்கும் எலான் மஸ்க்! OpenAI-க்கு போட்டியா?

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (17:17 IST)
சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் கொடுத்து வாங்கி தன் வசப்படுத்திக் கொண்ட தொழில் அதிபர் எலான் மஸ்க், அடுத்ததாக 'AI' தொழில்நுட்பத்தில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் 'AI' தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது என்பதும் எதிர்காலமே 'AI' தொழில்நுட்பம் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க், 'AI' துறையில் நுழைய திட்டமிட்டு இருப்பதாகவும் இதுக்காக புதிய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே உலகம் முழுவதும் OpenAI நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக எலான் மஸ்க் நிறுவனம்  இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இது குறித்து எலான்மஸ்க் கூறிய போது நாம் பிரபஞ்சத்தின் ஒரு சுவாரசியமான பகுதியில் இருக்கிறோம் என்றும் பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதில் அக்கறை கொண்ட ஒரு 'தொழில்நுட்பமாக எங்களது 'AI' இருக்கும் என்றும் பாதுகாப்பிற்கான சிறந்த பாதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்