உலகக் கோடீஸ்வரர்கள் ஏழையாக இருந்தால்? வைரலாகும் 'AI 'சேட்டை புகைப்படங்கள்!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (21:56 IST)
இன்றைய தொழில் நுட்பபுரட்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பது மனிதர்களுக்கு சாத்தியமாகியுள்ளது.

கூகுள் மூலம் புதிய புதிய தகவல்களை நொடியில் தெரிந்துகொள்ளும் காலத்தைக் கடந்து தற்போது, இல்லாத ஒரு விஷயத்தைச் செய்து பார்க்கும் வசதியும் ஏஐ என்ற ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் மூலம் சாத்தியமாகியுள்ளது.

இது மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகியுள்ளது. ஏற்கனவே சேட் ஜிபிடி என்பது மக்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளித்து பிரமிக்கச் செய்துள்ளள நிலையில், விதவிதமான ஏஐகள் மூலம் போட்டோகளை பேசும்படியும், மறைந்த அரசியல் தலைவர்கள் செல்ஃபி எடுப்பததுபோலவும் பலவற்றை சாத்தியமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய பணக்கார்கள் மற்றும் தொழில்திபர்களாக எலான் மஸ்க், பில்கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க் ஆகியோர் ஏழைகளக இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏஐ மூலம் வடிவமைத்த போட்டிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்