கமலா ஹாரிஸை விவாதத்திற்கு அழைத்த எலான் மஸ்க்.!

Senthil Velan

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:11 IST)
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்ந்து, அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸையும் நேர்காணல் செய்ய தயார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார். 
 
அதிபர் தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக அறிவித்த உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் டிரம்பின் தேர்தல் நிதியாக 375.80 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப்பை, எலான் மஸ்க் இன்று நேர்காணல் செய்திருந்தார்.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ள கமலா ஹாரிஸும் எக்ஸ் தள நேரலையில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார். எக்ஸ் தளத்தின் ஸ்பேஸஸில் கமலா ஹாரிஸையும் ஹோஸ்ட் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான் என மஸ்க் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். 

ALSO READ: ரூ.44,125 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.!
 
இது குறித்து கமலா ஹாரிஸ் முடிவு செய்ய வேண்டி உள்ளது. கடந்த சில வாரங்களில் அவர் எந்தவிதமான நேர்காணலிலும் பங்கேற்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்