அமெரிக்க அதிபர் போட்டியாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் இடையே நடைபெறும் நேரடி விவாதம் குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் தேர்தலில் மோத உள்ளனர் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
இருவருமே தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகிய இருவரும் வரும் 10ஆம் தேதி நேரடி விவாதம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் போட்டியாளராக இருந்த ஜோ பைடனுடன் டிரம்ப் விவாத நிகழ்ச்சி நடந்த நிலையில் தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டதை அடுத்து மீண்டும் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே நேரடி விவாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்த நேரடி விவாதத்தில் போது ஜோ பைடன் திணறிய நிலையில் கமலா ஹாரீஸ் - ட்ரம்புக்கு சரியான பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.