பிட் காயினை அதிகாரப்பூரவ நாணயமாக்கிய முதல் நாடு - எது தெரியுமா?

வியாழன், 10 ஜூன் 2021 (09:25 IST)
உலகின் முதல் நாடாக எல் சால்வடாரில் இணையதள பணமான பிட்காயினை அதிகாரப்பூர்வ பயணமாக அறிவித்துள்ளது. 

 
ஆம், மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் மற்ற நாணயங்களை போல கிரிப்டோ கரன்சியான பிட் காய்னையும் இனி அதிகாரப்பூரவ பணமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் ப்ட் காயின் பயன்பாட்டை தடை செய்துள்ள நிலையில் உலகின் முதல் நாடாக எல் சால்வடார் இதனை அறிவித்துள்ளது. 
 
இந்த முடிவு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டால் அடுத்த 90 நாட்களில் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிட் காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக்குவதன் மூலம் எல் சல்வோடாரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் மற்ற நாடுகளுடனான வர்த்தக ரீதியான அனுகுமுறை எளிதாகும் என நம்பப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்