ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் பீதி

வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (15:01 IST)
ஜப்பானில் அடுத்தடுத்து நிகழும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த மாதம் ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் 55 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடத்தில் மட்டும் 742 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் ஆமோரி நகரில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்