டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி: சீன நிறுவனம் அறிமுகம்..!

சனி, 25 பிப்ரவரி 2023 (16:35 IST)
டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி: சீன நிறுவனம் அறிமுகம்..!
டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோட் டாக்ஸி ஒரு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வகை டாக்ஸிகள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சீனாவை சேர்ந்த பைது என்ற நிறுவனம் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோட் டாக்ஸியை மேலும் சில மாகாணங்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் முன்னணி இணையதள தேடுதல் நிறுவனமான பைது ஊகான் மற்றும் சாங்கிங் ஆகிய நகரங்களில் அப்பல்லோகோ என்னும் பெயரில் ரோபோட் டாக்சி சேவையை தொடங்க கடந்த ஆண்டு சீன அரசிடம் அனுமதி பெற்றது. இந்த நிலையில் அந்த சேவையை தொடர்ந்து வழங்கி வரும் பைது தற்போது இந்த கார்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சீனாவில் டிரைவர் இல்லாமல் 100 கார்கள் இயங்கி வருவதாக பைது நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இன்னும் மேலும் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை விரிவுபடுத்த விரும்புவதாகவும் அடுத்தடுத்து விரைவில் நிறைய கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் பைது நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே உலகின் பல நாடுகளில் டிரைவர் இல்லாத ரோபோட் டாக்ஸிகள் இயங்கி வரும் நிலையில் தற்போது சீனாவிலும் இயங்கி வருவதால் இதனை அடுத்து இந்தியாவிலும் மிக விரைவில் இந்த வகை கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்