காபி குடித்தால் புற்றுநோய் வருமா?

வியாழன், 16 ஜூன் 2016 (04:08 IST)

காபி குடிப்பது தொடர்பாக முன்னர் விடுத்திருந்த சுகாதார ஆபத்து எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் மாற்றியமைத்திருக்கிறது.



 

காபி குடிப்பது, சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என 1991 முதல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என வலுவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், 65 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான சூடு உள்ள பானங்களை அருந்தும்போது, அது நோயை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

உணவுக்குழாயில் உண்டாகும் புற்றுநோய் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்