போதைக்காக குளியல் எண்ணெய் குடித்த 25 பேர் அகால மரணம்

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (21:20 IST)
ரஷ்யாவின் சைபீரியாவில் போதைக்காக குளியல் எண்ணெய் குடித்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் மட்டும் சுமார் 6,000 மக்கள் வசித்து வருகின்றனர். இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள சைபீரிய நகரில் மது வாங்கிக் குடிக்க முடியாதவர்கள் போலி மதுபானங்களை குடித்து வருகின்றனர். அல்லது குளியல் எண்ணெயில் சிறிது ஆல்கஹால் இருக்கும் என்பதால் போதைக்காக அதை வாங்கி அருந்தி வருகின்றனர்.

இப்படி வாங்கி அருந்தியவர்களில் 42 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 25 பேர் சிகிச்சை பலனின்றி பலியாயினர். மேலும் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குளியல் எண்ணெய் விற்றது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணெய் விற்பனையை தடை செய்ய உத்தேசித்து வருவதாக அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் டிமிரிதி மேத்வேதேவ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்