மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது: டொமினிக்கன் நீதிமன்றம் மறுப்பு!

வெள்ளி, 28 மே 2021 (14:45 IST)
மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது: டொமினிக்கன் நீதிமன்றம் மறுப்பு!
இந்திய வங்கிகளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு ஆண்டிகுவா நாட்டிற்கு தப்பி சென்ற மெகுல் சோக்சி என்பவர் சமீபத்தில் டொமினிகன் என்ற நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை அந்நாட்டில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்தது. இந்த நிலையில் மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது என அந்நாட்டின் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆண்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் மெகுல் சோக்சி, கியூபாவுக்கு தப்பிச் செல்வதற்காக படகில் டொமினிக்கன் வழியாக சென்று உள்ளார். அப்போது டொமினிக்கன் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
 
அவரை நாடு கடத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் வாதிட்டதை தொடர்ந்து நீதிபதி மறு உத்தரவு வரும் வரை மெகுல் சோக்சியை நாடு கடத்த வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் அவருக்கு சட்ட உதவி வழங்கும் வழக்கறிஞர் அவருடன் பேசவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளிவந்து உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்