நாய்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ‘டை’

புதன், 31 ஜனவரி 2018 (14:17 IST)
அமெரிக்காவில் டை பூசப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் கிடந்த நாய்க்குட்டியை மாவட்ட விலங்கு சேவை மையம் மீட்டெடுத்தது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு தெருவில் நாய்க்குட்டி ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக தகவல் பேஸ்புக்கில் பரவியது.  இதனையறிந்த பைன்லாஸ் மாவட்ட விலங்குகள் சேவை மையம், வலியால் துடித்துக் கொண்டிருந்த அந்த நாய்குட்டியை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்ததனர். 
 
சிகிச்சையின் போது நாய்க்குட்டியின் ரோமத்தில் டை புசியிருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து நாய்குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்கள், அதன் மேல் பூசப்பட்டிருந்த டை சாயத்தை சுத்தபடுத்தினர்.
 
பின்பு நாயின் உடல் முழுவதும் கொப்புளங்ள் மற்றும் கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து அதற்கு மருந்து கொடுத்தனர். டையில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற நச்சுபொருள் மனிதரின் உடல் அல்லாமல் நாயின் உடலுக்கும் கேடு விளைவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்