இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக உருமாறிய டெல்டா வைரஸ் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும் இரண்டாவது அலை வைரஸை விட மோசமானது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், WHO டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், டெல்டா வகை வைரஸ் தற்போது 96 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது மிக வேகமாக பல நாடுகளுக்கு பரவி வருவதால் வரும் மாதங்களில் அனைத்து வகை வைரஸ்களில் டெல்டா வகையின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும், தற்போதைய நிலையில் ஆல்பா வகை கொரோனா வைரஸ் 172 நாடுகளில் பரவியுள்ளது. பீட்டா வகை வைரஸ் 120 நாடுகளிலும் காமா வகை வைரஸ் 72 நாடுகளிலும் பரவியுள்ளது. டெல்டா பிளஸ் வகை வைரஸ் மேலும் 12 நாடுகளுக்கு பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.