30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை.! அதிரடி காட்டிய வடகொரிய அதிபர்..!

Senthil Velan

புதன், 4 செப்டம்பர் 2024 (14:20 IST)
வடகொரியாவில் வெள்ளத்தின் போது உயிரிழப்பைத் தடுக்கத் தவறிய, 30 அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் மரணதண்டனை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்கத் தவறியதால், அரசு அதிகாரிகள் 30 பேரைதூக்கிலிட  வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
பேரழிவுவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த மாத இறுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 


ALSO READ: 'பிகில்' பட கதை திருட்டு தொடர்பான வழக்கு.! இயக்குனர் அட்லி பதிலளிக்க உத்தரவு.!!
 
'வெள்ளம் பாதித்த பகுதியில் 20 முதல் 30 பணியாளர்கள் கடந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்