இந்நிலையில், ஆப்கன் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பான யுனிசெஃப் ”கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கன் குழந்தைகள் பலர் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் உள்ள குழந்தைகளும் ஆரோக்கியமான சுற்றுசூழலை இழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.
மேலும், அங்குள்ள தற்போதைய நிலவரப்படி பாதுகாப்பு நெருக்கடி, உணவுப் பொருட்கள் விலையுயர்வு, கடுமையாக வறட்சிநிலை, உலகப் பெருந்தொற்றாக்ன கொரொனா போன்றவற்றால் குழந்தைஅகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளது.